மீண்டும் குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,040 குறைந்துள்ளது.
மீண்டும் குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
Published on

சென்னை,

தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடனேயே பயணிக்கிறது. கடந்த 1-ந்தேதி விலை அதிகரித்து, 2-ந்தேதி விலை குறைந்த நிலையில், அதன் பின்னர் தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலையில் தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. சவரனுக்கு ரூ. 1,120-ம், கிராமுக்கு ரூ.140-ம் குறைந்து, ஒரு சவரன் ரூ.1,10,480-க்கும், ஒரு கிராம் ரூ.13,810-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

காலையில் குறைந்த தங்கம் விலை பிற்பகலில் அதிரடியாக உயர்ந்தது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று பிற்பகலில் சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,11,920-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.180 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,990-க்கு விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளி விலை நேற்று காலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் வெள்ளி விலை நேற்று பிற்பகலில் கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் உயர்ந்து ஒரு கிராம் ரூ.260-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை

இந்நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,040 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,10,880-க்கும், கிராமுக்கு ரூ.130 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,860-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையை பொறுத்தவரையில், கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

07.04.2026 - ஒரு சவரன் - ரூ.1,10,880 (இன்று)

06.04.2026 - ஒரு சவரன் - ரூ.1,11,920 (நேற்று)

05.04.2026 - ஒரு சவரன் - ரூ.1,11,600

04.04.2026 - ஒரு சவரன் - ரூ.1,11,600

03.04.2026 - ஒரு சவரன் - ரூ.1,10,800

02.04.2026 - ஒரு சவரன் - ரூ.1,10,000

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com