

சென்னை,
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப நாள் தோறும் தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, தங்கம், வெள்ளி மீது சர்வதேச முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தவாறு இருக்கிறது. இந்த ஆண்டு தொடக்கம் முதலேயே தங்கம் விலை உச்சம் தொட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி தங்கம் விலை கிராம் 14 ஆயிரத்து 580-க்கும், பவுன் ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்து 640-க்கும் விற்பனையானது. கடந்த 11-ந்தேதி கிராமுக்கு ரூ.210 அதிகரித்து, கிராம் ரூ.14 ஆயிரத்து 790-க்கு விற்பனையானது. நேற்று முன்தினம் தங்கம் விலை சரிவை சந்தித்தது. அன்றைய தினம் கிராமுக்கு ரூ.190, பவுனுக்கு ரூ.1,520-ம் குறைந்தது. நேற்றும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 குறைந்து ரூ.14,400-க்கு விற்பனையானது.
இன்றைய தங்கம், வெள்ளி விலை
இந்த நிலையில், ஆபரணத்தங்கத்தின் விலை 2 நாட்களுக்கு பின் மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கம் சவரனுக்கு 1,280 அதிகரித்து ரூ.1,16,480க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு கிராம் ரூ.14,560க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.280-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.