அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன.?

வெள்ளி விலையில் இன்று மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன.?
Published on: 

சென்னை,

வார தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை உயர்ந்து வருகிறது. அதன்படி, 1-ந்தேதி ஒரு சவரன் ரூ.1,01,840-க்கும், ஒரு கிராம் ரூ.12,730-க்கும் விற்பனையானது. 2-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.1,02,200-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.12,775-க்கும் விற்பனையானது. நேற்று சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.1,02,400-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.12,800-க்கும் விற்பனையானது.

நேற்றைய நிலவரம்

இதனை தொடர்ந்து, தங்கத்தின் விலை நேற்று ஒரேநாளில் 2 முறை உயர்ந்தது. அதன்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 2,200 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,04,800-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் கிராமிற்கு ரூ. 275 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 13,100-க்கு விற்பனை செய்யப்பட்டது.

உயர்ந்த தங்கம் விலை

இந்நிலையில், தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 2,280 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 107,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமிற்கு மேலும் ரூ. 285 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 13,385-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை இன்று மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ. 210க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி ஒரு கிலோ வெள்ளி ரூ. 2,10,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

X