தொடர்ந்து சரிவை சந்திக்கும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.480 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,17,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.
Image Courtacy: AI
Image Courtacy: AI
Published on

சென்னை,

தங்கம் விலை கடந்த 10, 11-ந்தேதிகளில் விலை உயர்ந்து வந்த நிலையில், கடந்த சில தினங்களாக குறைந்து காணப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,17,200-க்கும், கிராமுக்கு ரூ.60 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,650-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4-ம், கிலோவுக்கு ரூ.4 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.280-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.

தங்கம் விலை

இந்த நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.640 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,16,560-க்கும், கிராமுக்கு ரூ.80 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,570-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. அதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.275-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் விற்பனை ஆகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

18.03.2026 ஒரு சவரன் ரூ. 1,16,560 (இன்று)

17.03.2026 ஒரு சவரன் ரூ.1,17,200 (நேற்று)

16.03.2026 ஒரு சவரன் ரூ.1,17,680

15.03.2026 ஒரு சவரன் ரூ.1,18,080

14.03.2026 ஒரு சவரன் ரூ.1,18,080

13.03.2026 ஒரு சவரன் ரூ.1,19,200

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com