அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.640 குறைந்து, ஒரு சவரன் ரூ. 1,15,360-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
Published on

சென்னை,

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப நாள்தோறும் தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, தங்கம், வெள்ளி மீது சர்வதேச முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தவாறு இருக்கிறது. இதன்படி இந்த ஆண்டு தொடக்கம் முதலே தங்கம் மற்றும் வெள்ளி விலை உச்சம் தொட்டு வருகிறது. கடந்த 1-ந்தேதி கிராம் ரூ.14,900, சவரன் ரூ.1,19,200 ஆகவும் விற்பனை ஆனது. அதன் பின்னர், தங்கம் சற்று ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது.

நேற்று முன்தினம் விலை அதிகரித்தது. இந்த சூழலில் நேற்று தங்கம் விலை சற்று குறைந்து காணப்பட்டது. அதன் படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 500-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.80-ம், சவரனுக்கு ரூ.640-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயி ரத்து 420-க்கும். ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 360-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் நேற்று மாற்றம் இல்லாமல், ஒரு கிராம் ரூ.270-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய தங்கம் விலை

இந்தநிலையில் சென்னையில், தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,080 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,17,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.260 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,680க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய வெள்ளி விலை

வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.290-க்கும், ஒரு கிலோ ரூ.2,90,000-க்கும் விற்பனையாகி வருகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

21.01.2026 ஒரு சவரன் - ரூ.1,17,440 (இன்று)

20.01.2026 ஒரு சவரன் - ரூ.1,15,360 (நேற்று)

19.01.2026 ஒரு சவரன் - ரூ.1,16,000

18.01.2026 ஒரு சவரன் - ரூ.1,13,840

17.01.2026 ஒரு சவரன் - ரூ 1,14,560

16.01.2026 ஒரு சவரன் - ரூ.1,15,520

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com