

சென்னை
ஈரானுக்கு எதிராக இஸ்ரேல், அமெரிக்கா நாடுகள் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது போர் உச்சத்தில் இருக்கும் சூழலில் தங்கம் விலை கடந்த ஒரு வாரத்துக்கு மேல் தொடர்ந்து இறங்குமுகத்தில் இருந்து வந்தது. கடந்த 12-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்து, ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. அதன்பின்னர் தொடர்ந்து விலை சரிந்து கொண்டே வந்தது. இதன்படி தினமும் புதிய உச்சம் என்ற போக்கில் இருந்த தங்கம், இப்போது தினமும் சரிவு என்ற பாதையில் பயணிக்க தொடங்கி இருந்தது.
இந்நிலையில் நேற்று தங்கம் விலை சற்று உயர்ந்திருந்தது. நேற்றைய நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,11,600-க்கும், கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,950-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையை பொறுத்தவரையில் கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ. 260-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
இந்த நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக சரிந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.2,640 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,08,960-க்கும், கிராமுக்கு ரூ.330 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,620-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. அதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு ரூ.10 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ. 250-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்பனை ஆகிறது.
வெள்ளி விலை கடந்த 10 நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூ.50-ம், கிலோவுக்கு ரூ.50 ஆயிரமும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
21.03.2026 ஒரு சவரன் ரூ. 1,08,960 (இன்று)
20.03.2026 ஒரு சவரன் ரூ. 1,11,600 (நேற்று)
19.03.2026 ஒரு சவரன் ரூ. 1,11,200
18.03.2026 ஒரு சவரன் ரூ. 1,16,560
17.03.2026 ஒரு சவரன் ரூ. 1,17,200
16.03.2026 ஒரு சவரன் ரூ. 1,17,680