தங்கம், வெள்ளி விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

தங்கத்தின் விலை சவரனுக்கு நேற்று ரூ.480 குறைந்திருந்தது.
தங்கம், வெள்ளி விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
Published on

சென்னை,

அட்சய திருதியையொட்டி நேற்று முன்தினம் தமிழகத்தில் நகைக்கடைகளில் தங்கத்தின் விற்பனை அமோகமாக இருந்தது. தொடர்ந்து நேற்றும் நகைக்கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

மேலும் தங்கத்தின் விலையும் நேற்று சற்று குறைந்திருந்தது. சென்னையில் நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.14 ஆயிரத்து 360-க்கு விற்றது. நேற்று ரூ.60 குறைந்து ரூ.14 ஆயிரத்து 300-க்கு விற்றது. ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 880-ல் இருந்து சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 400-க்கு விற்பனையானது.

வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் கிராம் ரூ.280-க்கும், கிலோ ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்திற்கும் விற்பனையானது.

தங்கம் விலை

இந்த நிலையில், சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையில் இன்று மாற்றமில்லை. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்றையவிலையிலேயே அதாவது ஒரு சவரன் ரூ.1,14,400-க்கும், ஒரு கிராம் ரூ.14,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.275-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

21.04.2026 - ஒரு சவரன் - ரூ.1,14,400 (இன்று)

20.04.2026 - ஒரு சவரன் - ரூ.1,14,400 (நேற்று)

19.04.2026 - ஒரு சவரன் - ரூ.1,14,880

18.04.2026 - ஒரு சவரன் - ரூ.1,14,880

17.04.2026 - ஒரு சவரன் - ரூ.1,13,680

16.04.2026 - ஒரு சவரன் - ரூ.1,14,880

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com