இல்லத்தரசிகளுக்கு ஜாக்பாட்..! சவரனுக்கு ரூ.1 லட்சத்தை நோக்கி சரியும் தங்கம் விலை..!

தங்கம் விலை நேற்று சவரனுக்கு ஒரே நாளில் ரூ.1,680 சரிந்து, ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 800-க்கு விற்பனை ஆனது.
சரியும் தங்கம் விலை
Published on

சென்னை,

தங்கம் விலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து விலை அதிகரித்து கொண்டே வந்தது. அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 450-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 600-க்கும் விற்கப்பட்டது. அதன் பின்னர் மேலும் விலை அதிகரித்து, பின்னர் குறைந்து மார்ச் மாதம் 23-ந்தேதி ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 340-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 720-க்கும் விற்பனை ஆனது.

இதனையடுத்து விலை தொடர்ந்து ஏற்றம் கண்டது. இப்படியாக விலை எகிறி வந்து, இம்மாதத்தின் தொடக்கத்தில் அதாவது 1-ந்தேதி ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 500கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து விலை சரிந்து, கடந்த 15-ந் தேதி ஏறுமுகத்துக்கு சென்று மீண்டும் இறங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் விலை சரிந்திருந்தது.

நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 560-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 480-க்கும் விற்கப்பட்ட நிலையில், நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.210-ம், சவரனுக்கு ரூ.1,680-ம் சரிந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 350-க்கும். ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளி விலையும், தங்கம் விலையை போலவே சரிவை சந்தித்து வருகிறது. நேற்று கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு ரூ.10 ஆயிரமும் குறைந்து ஒரு கிராம் ரூ.240-க்கும். ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.

தங்கம் விலை

இந்த நிலையில், தங்கம் விலை இன்று மேலும் அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,680 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,05,120-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ.210 குறைந்து ஒரு கிராம் ரூ.13,140-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 11 நாட்களில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.930-ம், சவரனுக்கு ரூ.7 ஆயிரத்து 440-ம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி விலை

தங்கத்தை போலவே வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.230-க்கும், கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் குறைந்து ஒரு கிலோ 2 லட்சத்து 30 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

25.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,05,120 (இன்று)

24.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,06,800 (நேற்று)

23.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,08,480

22.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,08,800

21.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,08,800

20.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,08,800

X

Daily Thanthi
www.dailythanthi.com