அதிரடியாக சரிந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ரூ. 260க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை
Published on

சென்னை,

சென்னையில் நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.14 ஆயிரத்து 70-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 560-க்கும் விற்பனையானது. இறங்கிய அதே வேகத்தில் தங்கம் விலை நேற்று ஏறியது. அதன்படி ஒரு கிராம் ரூ.130-ம், சவரன் ரூ.1,040-ம் அதிகரித்தது. அதன்படி ஒரு கிராம் தங்கம் ரூ.14 ஆயிரத்து 200-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை உயர்ந்தாலும் வெள்ளி விலை உயரவில்லை. கடந்த 4 நாட்களாக வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் ரூ.270-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது.

தங்கம் விலை

இந்நிலையில், தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.400 குறைந்து, ஒரு கிராம் ரூ. 13,800-க்கும், சவரனுக்கு ரூ.3,200 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,10,400-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. இதன்படி வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ரூ.260க்கும், ஒரு கிலோ ரூ.2,60,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

10.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,10,400 (இன்று)

09.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,13,600 (நேற்று)

08.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,12,560

07.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,13,600

06.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,13,600

05.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,15,440

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com