சற்று உயர்ந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன.?

வெள்ளி விலை 2-வது நாளாக மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சற்று உயர்ந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன.?
Published on

சென்னை,

தங்கம் விலை கடந்த 27-ந்தேதி வரை குறைந்து வந்து, அதன் தொடர்ச்சியாக நேற்றும் விலை குறைந்திருந்தது. அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 215-க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 720-க்கும் விற்பனை ஆனது.

தங்கம் விலை

நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.60-ம், பவுனுக்கு ரூ.480-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 155-க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 240-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், நேற்று மாற்றம் இல்லாமல், ஒரு கிராம் ரூ.235-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 35 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது.

இன்றைய தங்கம் விலை

இந்த நிலையில், தங்கம் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,05,840-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ.75 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,230-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

சென்னையில் வெள்ளி விலை 2-வது நாளாக மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.235-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 35 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com