ஒரே நாளில் ரூ.2,400 உயர்வு: மீண்டும் கூடிய தங்கம் விலை

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று காலை ரூ.1,200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,07,200க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஒரே நாளில் ரூ.2,400 உயர்வு: மீண்டும் கூடிய தங்கம் விலை
Published on

சென்னை,

தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற-இறக்கம் கண்டு வந்து, கடந்த மாதம் (ஜூன்) இறுதியில் விலை மளமளவென சரிந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் இரு முறை தங்கம் விலை மாற்றம் கண்டது. காலையில் ரூ.2,160 குறைந்து, மாலையில் ரூ.1,360 உயர்ந்திருந்தது. இதனையடுத்து 2-வது நாளாக நேற்றும் ஒரே நாளில் இரு முறை விலை மாற்றம் இருந்தது.

அதன்படி, நேற்று காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100-ம். சவரனுக்கு ரூ.800-ம் குறைந்திருந்த நிலையில். மாலையில் கிராமுக்கு ரூ.150-ம், சவரனுக்கு ரூ.1,200-ம் உயர்ந்திருந்தது.ஆக மொத்தம் நேற்று முன்தினம் விலையைவிட நேற்று கிராமுக்கு ரூ.50-ம். சவரனுக்கு ரூ.400-ம் உயர்ந்து. ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 250-க்கும். ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது.

இந்த சூழலில் வாரத்தின் 4-வது நாளான இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ. 1,200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,07,200க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.150 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,400க்கு விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் ரூ.250க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் உயர்ந்து, ஒரு கிலோ ரூ.2,50,000க்கு விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை

இந்நிலையில் சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இதன்படி ரூ.1,200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,08,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,550க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை இன்று காலையில் சவரனுக்கு ரூ.1,200 கூடிய நிலையில், மாலையில் ரூ.1,200 என ஒரே நாளில் ரூ.2,400 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com