சற்று உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.270-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சற்று உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
Published on

சென்னை,

தங்கம் விலை மீண்டும் ஏற்ற-இறக்கத்துடன் நீடிக்கிறது. கடந்த மாதம் (ஏப்ரல்) 29-ந் தேதி விலை குறைந்து, நேற்று முன்தினம் விலை உயர்ந்தது. இதனைத்தொடர்ந்து நேற்று விலை குறைந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 100-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 800-க்கும் விற்கப்பட்டது. நேற்று காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் குறைந்து இருந்தது.

இதனைத்தொடர்ந்து நேற்று மாலையில் மேலும் கிராமுக்கு ரூ.130-ம், சவரனுக்கு ரூ.1,040-ம் சரிந்தது. ஆக நேற்று ஒரே நாளில் 2 முறை இறக்கம் கண்டது. மொத்தம் கிராமுக்கு ரூ.180-ம், சவரனுக்கு ரூ.1,440-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 920-க்கும். ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 360-க்கும் விற்பனை ஆனது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.265-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை

இந்த நிலையில், சென்னையில் தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. அதன்படி, தங்கம் கிராமுக்கு ரூ.80-ம், சவரனுக்கு ரூ.640-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 14,000-க்கும், ஒரு சவரன் ரூ.1,12,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.270-க்கும், கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.2,70,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

02.05.2026 - ஒரு சவரன் - ரூ.1,12,000 (இன்று)

01.05.2026 - ஒரு சவரன் - ரூ.1,11,360 (நேற்று)

30.04.2026 - ஒரு சவரன் - ரூ.1,12,800

29.04.2026 - ஒரு சவரன் - ரூ.1,11,200

28.04.2026 - ஒரு சவரன் - ரூ.1,12,800

27.04.2026 - ஒரு சவரன் - ரூ.1,13,840

X

Daily Thanthi
www.dailythanthi.com