

சென்னை,
தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் நீடிக்கிறது. அந்த வகையில் கடந்த 13, 14-ந்தேதிகளில் விலை குறைந்து, 15-ந்தேதி விலை உயர்ந்தது. இதனையடுத்து கடந்த 2 நாட்களாக விலை குறையத் தொடங்கியுள்ளது.
நேற்று கிராமுக்கு ரூ.30-ம், சவரனுக்கு ரூ.240-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 30-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 240-க்கும் விற்கப்பட்டது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், மாற்றம் இல்லாமல், ஒரு கிராம் ரூ.275-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.
இந்நிலையில், தங்கம் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. அதன்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 14,060-க்கும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,12,480-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளியின் விலை இன்று குறைந்துள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.270க்கும், ஒரு கிலோ ரூ.2,70,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
18.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,12,480 (இன்று)
17.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,12,240 (நேற்று)
16.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,12,480
15.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,12,560
14.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,10,880
13.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,10,880