சற்று குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

தங்கம் விலை நேற்று ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 770-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்து 160-க்கும் விற்பனை ஆனது.
சற்று குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
Published on

சென்னை,

தங்கம் விலை கடந்த 24-ந்தேதி வரை குறைந்து கொண்டே வந்த நிலையில், 25-ந்தேதி விலை ஏற்றம் கண்டு, 26-ந்தேதி குறைந்தது. அதன் பின்னர் மீண்டும் விலை உயர்ந்து வருவதை பார்க்க முடிகிறது.

இந்த நிலையில் நேற்று காலை கிராமுக்கு ரூ.60-ம், சவரனுக்கு ரூ.480-ம் குறைந்து, பிறகு மாலை கிராமுக்கு ரூ.170-ம், சவரனுக்கு ரூ.1,360-ம் உயர்ந்து காணப்பட்டது.

மொத்தமாக நேற்று முன்தினம் விலையுடன் ஒப்பிடுகையில் கிராமுக்கு ரூ.110-ம், சவரனுக்கு ரூ.880-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 770-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்து 160-க்கும் விற்பனை ஆனது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், கிராமுக்கு ரூ.5-ம். கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் அதிகரித்து. ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது.

தங்கம் விலை

இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,09,360-க்கும், கிராமுக்கு ரூ.100 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,670-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. அதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்பனை ஆகி வருகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

31.03.2026 - ஒரு சவரன் - ரூ.1,09,360 (இன்று)

30.03.2026 - ஒரு சவரன் - ரூ.1,10,160 (நேற்று)

29.03.2026 - ஒரு சவரன் - ரூ.1,09,280

28.03.2026 - ஒரு சவரன் - ரூ.1,09,280

27.03.2026 - ஒரு சவரன் - ரூ.1,07,440

26.03.2026 - ஒரு சவரன் - ரூ.1,06,800

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com