தங்கம் விலை குறைவு; இன்றைய நிலவரம் என்ன...?

வெள்ளி விலையில் மாற்றமில்லை.
image courtesy : pti
Published on

சென்னை,

தங்கம் விலையில் ஏற்ற-இறக்கம் தொடர்ந்து நீடிக்கிறது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து சரிந்து வந்த தங்கம் விலையில் கடந்த சனிக்கிழமை உயர்வு காணப்பட்டது.

அதன்படி, கடந்த சனிக்கிழமை தங்கம் கிராமிற்கு ரூ. 160ம் , சவரனுக்கு ரூ. 1 ஆயிரத்து 280ம் உயர்ந்து ஒரு கிராம் ரூ. 13 ஆயிரத்து 300க்கும், ஒரு சவரன் ரூ. 1 லட்சத்து 6 ஆயிரத்து 400க்கும் விற்கப்பட்டது. வெள்ளி விலை கிராமிற்கு ரூ. 10ம், கிலோவுக்கு ரூ. 10 ஆயிரமும் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 245க்கும், ஒரு கிலோ ரூ. 2 லட்சத்து 45 ஆயிரத்து விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை

இந்நிலையில், தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி, ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 70 குறைந்து ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 300க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், சவரனுக்கு ரூ. 560 குறைந்து ஒரு சவரன் ரூ. 1 லட்சத்து 6 ஆயிரத்து 400க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் இன்று மாற்றமின்றி நேற்றைய விலையே நீடிக்கிறது. அதன்படி வெள்ளி ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 45 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

29.06.2026 - ஒரு சவரன் - ரூ. 1,06,400 (இன்று)

27.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,06,960

26.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,06,400

25.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,05,120

24.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,06,800

23.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,08,480

X

Daily Thanthi
www.dailythanthi.com