“லப்பர் பந்து” படம் வெளியாகி 2 ஆண்டுகள் நிறைவு; வெற்றியை நினைவுகூர்ந்த ஹரிஷ் கல்யாண்

ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் நடித்துள்ள ‘லப்பர் பந்து’ திரைப்படம் கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

“லப்பர் பந்து” படம் வெளியாகி 2 ஆண்டுகள் நிறைவு;  வெற்றியை நினைவுகூர்ந்த ஹரிஷ் கல்யாண்
Published on

நாங்கள் கற்பனை செய்ததைக் காட்டிலும் மிகப் பெரிய வாழ்க்கையை ‘லப்பர் பந்து’ திரைப்படத்திற்கு நீங்கள் அனைவரும் கொடுத்திருக்கிறீர்கள் என்று ஹரிஷ் கல்யாணின் பதிவிட்டுள்ளார்.

இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து

கனா, எப்.ஐ.ஆர் படங்களில் இணை இயக்குனர் மற்றும் நெஞ்சுக்கு நீதி படத்திற்கு வசனம் எழுதிய தமிழரசன் பச்சமுத்து இயக்குனராக அறிமுகமான திரைப்படம் லப்பர் பந்து. இப்படத்தை சர்தார், காரி, ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து கதாநாயகர்களாக நடித்துள்ளனர். சுவாசிகா விஜய் மற்றும் வதந்தி வெப் தொடரின் மூலம் பிரபலமடைந்த சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் தேவதர்ஷினி, பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். பியார் பிரேமா காதல் படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். சிறந்த படங்களில் ஒன்று என ரசிகர்களிடமிருந்து பாராட்டுகளும் கிடைத்துள்ளன. கிரிக்கெட்டை மையமாக வைத்து குடும்ப படமாகவும் இது உருவாகியுள்ளதால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. இத்திரைப்படம் கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ், விஜயகாந்தின் தீவிர ரசிகராக நடித்திருந்தார். ஹரிஷ் கல்யாண் விஜய்யின் ரசிகராக நடித்திருந்தார். இருவருக்கும் இடையில் ஏற்படும் ஈகோ தொடர்பான கதை தான் இந்த லப்பர் பந்து. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் திரை பிரபலங்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது. லப்பர் பந்து படம் சுமார் 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அனைவருக்கும் லாபத்தைக் கொடுத்தது. 'சில்லாஞ்சிருக்கியே' வீடியோ பாடல் யூடியூபில் 2 கோடி பார்வைகளை கடந்துள்ளது.

வெற்றியை நினைவுகூர்ந்த ஹரிஷ் கல்யாண்

இந்நிலையில் லப்பர் பந்து படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி நடிகர் ஹரிஷ் கல்யாண் படம் குறித்து பகிர்ந்துள்ளார். அதில் “நாம் உருவாக்கும் சில திரைப்படங்கள் நம்முடைய படைப்புகளாக மட்டுமே இருக்கும்...ஆனால், சில திரைப்படங்கள் நம்முடைய வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறிவிடும்.

என்னைப் பொறுத்தவரை, இந்தப் படம் அப்படிப்பட்ட ஒன்று. இந்தப் பயணத்தைத் தொடங்கிய முதல் நாளிலிருந்து, இன்று வரை நடந்த அனைத்திலும் உங்கள் அன்பு அளவிட முடியாததாக இருந்துள்ளது.நாங்கள் கற்பனை செய்ததைக் காட்டிலும் மிகப் பெரிய வாழ்க்கையை இந்தப் படத்திற்கு நீங்கள் அனைவரும் கொடுத்திருக்கிறீர்கள்.மனதின் ஆழத்திலிருந்து மிக்க நன்றி. இந்த அன்பை நான் என்றும் என்னுடன் சுமந்து செல்வேன்” என்று கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com