கயல் சந்திரன் நடித்துள்ள 'சிங்கா' படத்தின் டீசர் வெளியீடு

ராஜ துரை சிங்கம் இயக்கிய ‘சிங்கா’ படத்தில் கயல் சந்திரன், சிஜா ரோஸ் மற்றும் மீனாட்சி ரவிந்திரன் நடித்துள்ளனர்.
கயல் சந்திரன் நடித்துள்ள 'சிங்கா' படத்தின் டீசர் வெளியீடு
Published on

சென்னை,

ருத்ரம் சினிமாஸ் சார்பில் அறிமுக இயக்குனர் ராஜ துரை சிங்கம் எழுதி, இயக்கியுள்ள புதிய படம், ‘சிங்கா’.இதில் கயல் சந்திரன் கதாநாயகனாக நடித்துள்ளார். மலையாள நடிகைகள் சிஜா ரோஸ் மற்றும் மீனாட்சி ரவிந்திரன் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் இதில் ஆதித்யா கதிர், சூப்பர் குட் சுப்ரமணி, டி.எஸ்.ஆர். மற்றும் மலையாள நகைச்சுவை நடிகர் அரிஸ்டோ சுரேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் மனோஜ் சின்னசாமி இசையமைக்கிறார்.

மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையிலான ஆழமான அன்பையும், முறியாத பிணைப்பையும், கொண்டாடும் இதயத்தை வருடும் குடும்பக் கதையாக சிங்கா உருவாகி இருக்கிறது, புகழ்பெற்ற இயக்குனர்கள் வசந்த், சற்குணம் ஆகியோரிடம் இணை இயக்குனராக பணியாற்றி அனுபவத்தைப் பெற்ற இயக்குநர் ராஜா துரை சிங்கம் இயக்கும் இந்த படம், உணர்ச்சி, நம்பிக்கை, காதல், ஆகியவற்றின் ஒன்றிணைந்த கலவையாக குடும்பம் முழுவதும் ரசிக்கும் படமாக உருவாகியுள்ளது.

கதையின் மையத்தில் இருக்கும் ‘சிங்கா’ எனும் அன்பான லாப்ரடார் நாய் தனது அழகிய அரவணைப்பினாலும், ஆழமான உணர்வுகளாலும் அனைவரின் மனங்களையும் நிச்சயம் கவருவான். மனிதனுடன் பகிரும் நட்பின் மூலம் அன்பு, நம்பிக்கை, வாழ்க்கைப் பயணம் ஆகியவை எவ்வாறு மலர்கின்றன என்பதைக் காட்டும் கதை இது.

இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இந்த டீசர் மக்கள் மத்தியில் கவனத்தை பெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com