விஸ்மயா மோகன்லாலின் “துடக்கம்” படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் விஸ்மயா மோகன்லால் நடிக்கும் ‘துடக்கம்’ படம் ஆகஸ்ட் 7ம் தேதி வெளியாகவுள்ளது.
விஸ்மயா மோகன்லாலின்  “துடக்கம்” படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
Published on

விஸ்மயா மோகன்லால் நடிக்கும் ‘துடக்கம்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

இந்தியளவில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் மோகன்லால். மலையாள சினிமாவின் வணிகத்தை உலகளவில் கொண்டு சென்றவர்களில் முதன்மையானவராக இருக்கிறார். மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் நடிகராக உள்ள நிலையில், தற்போது அவரின் மகள் விஸ்மயாவும் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகிறார்.

மோகன்லாலின் தயாரிப்பு நிறுவனமான ஆசிர்வாத் சினிமாஸ் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதையடுத்து இந்தபடத்தின் அறிவிப்பு வெளியானது. விஸ்மயாவின் முதல் படத்தை இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்குகிறார். இப்படத்திற்கு, ‘துடக்கம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் மோகன்லால், ஆஷிஷ் உள்ளிடோர் நடிக்க, ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.

நடிகர் மோகன்லால் தன் மகள் நடிகையாக அறிமுகமாகும் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

விஸ்மயா மோகன்லால் நடிக்கும் ‘துடக்கம்’ படம் ஆகஸ்ட் 7ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், விஸ்மயா மோகன்லால் நடிக்கும் ‘துடக்கம்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் நடிகர் மோகன்லால் இடம்பெற்றுள்ளார். மகள் நாயகியாகும் படத்தில் மோகன்லாலும் இணைந்துள்ளதால் அவரது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com