

சென்னை,
விக்னேஷ் சிவன் இயக்கத்தில், நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (எல்.ஐ.கே). இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கீர்த்தி ஷெட்டி, சீமான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். கடந்த வாரம் வெளியான இந்த படம் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
திரையரங்குகளில் பெரும் வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கும் இந்தப் படத்தின் வெற்றி கொண்டாடாட்ட நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட எஸ்.ஜே.சூர்யா லப்பர் பந்து நடிக்க மறுத்தது ஏன்? என விளக்கம் கொடுத்துள்ளார்.
இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே சூர்யா கூறியதாவது: நான் மனதில் பட்டதை பேசிவிடுவேன். என்னிடம் ஒரு இயக்குனர் வந்து கதை சொன்னார். நான் எனக்கு இந்த கரெக்ஷன் வேண்டும் என்று சொன்னேன். மீண்டும் மீண்டும் திருத்தம் சொன்னேன். அதையும் அவர் செய்கிறேன் என்றார். அப்போது நான் சொன்னேன்.. எனக்கு ஒரு வாழ்க்கை இருக்கு... நான் போயிட்டு இருக்கேன்.. நீங்கள் நான் வேண்டும் என்று சொல்லி உங்க வாழ்க்கையை நீங்கள் இழந்துவிடாதீர்கள். அதனால், அந்த படத்தில் நான் இல்லை என்றாலும் பரவாயில்லை..நீங்க யரையாவது நன்றாக படம் வைத்து எடுத்து சந்தோஷமாக இருங்கள் என்றேன். மனதில் பட்டதை நான் சொன்னேன். அந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. அந்த படம் லப்பர் பந்து. நான் சுயநலமாக சிந்தித்து இருந்தால், நான் சில திருத்தம் சொல்லி.. சொன்னதையெல்லாம் செய்கிறாரே என்று அந்த கதையில் நான் நடித்து இருக்க முடியும்” என்றார்.