திருமலை எஸ்.வி. அருங்காட்சியகம் நவம்பர் முதல் வாரத்தில் திறப்பு

நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள 'பிரம்மாண்டம்' காட்சியகம் ஒரு முக்கிய ஈர்ப்பாக அமையும்.
திருமலை
Published on: 

திருமலை,

திருமலையில் உள்ள வெங்கடேஸ்வரா அருங்காட்சியகத்தின் தலைமை அதிகாரி சோமன்னாராயணா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

அருங்காட்சியகம்

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தின் போது ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு இந்த அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார். ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற் சவத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் சோதனை ஓட்டத்திற்குப் பிறகு, நவம்பர் மாதம் முதல் வாரத்தில் இந்த அருங்காட்சியகம் பக்தர்களின் பார்வைக்காகத் திறக்கப்படும்.

உலகத்தரத்தில் மேம்படுத்தப்பட்ட எஸ்.வி. அருங்காட்சியகத்தில் திருமலையின் வரலாறு மற்றும் பாரம்பரியத்தை விளக்கும் வகையில், சிற்பங்கள் மற்றும் அரிய வகை ஆபரணங்கள், ஆயுதங்கள். இசைக்கருவிகளின் டிஜிட்டல் காட்சிகளுடன் கூடிய 14 காட்சியகங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.

நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள 'பிரம்மாண்டம்' காட்சியகம் ஒரு முக்கிய ஈர்ப்பாக அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com