திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெப்போற்சவ சோதனை ஓட்டம்

தெப்போற்சவத்தின் முதல் நாளில், அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் உற்சவர்களான சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் பவனி வந்து அருள்பாலிக்கின்றனர்.
தெப்போற்சவ சோதனை ஓட்டம்
தெப்போற்சவ சோதனை ஓட்டம்
Published on

திருமலை:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தெப்போற்சவம் விமரிசையாக நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தெப்போற்சவம் வரும் 26-ம் தேதி தொடங்கி மார்ச் 2-ம் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. கோவில் அருகே உள்ள சுவாமி புஷ்கரணியில் தினமும் இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை தெப்போற்சவம் நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. சுவாமி புஷ்கரணியில் தெப்பம் அலங்காரம் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இதன் சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது. நீராழி மண்டபத்தை சுற்றி தெப்பம் வலம் வந்தது. தேவஸ்தான துணை செயல் அதிகாரி லோகநாதன் மற்றும் அதிகாரிகள் தெப்பத்தில் சென்று ஆய்வு செய்தனர்.

தெப்போற்சவ சோதனை ஓட்டம்
தெப்போற்சவ சோதனை ஓட்டம்

தெப்போற்சவ நிகழ்ச்சிகள்

தெப்போற்சவத்தின் முதல் நாளான 26-ம் தேதி உற்சவர்களான சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் எழுந்தருளி 3 சுற்றுகள் தெப்பத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

27-ம் தேதி ஸ்ரீகிருஷ்ணர், ருக்மினி தேவியுடன் தெப்பத்தில் எழுந்தருளி 3 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.

28-ம் தேதி உற்சவர்களான மலையப்ப சுவாமி, தாயாருடன் எழுந்தருளி 3 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

Also Read
கள்ளழகர் கோவிலில் மாசி தெப்பத் திருவிழா: 1-ந் தேதி தொடங்குகிறது
தெப்போற்சவ சோதனை ஓட்டம்

மார்ச் 1-ம் தேதி உற்சவர்களான மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் எழுந்தருளி 5 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். நிறைவு நாளில் (மார்ச் 2) உற்சவர்களான மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் 7 சுற்றுகள் தெப்பத்தில் பவனி வருகிறார்.

தெப்போற்சவத்தை முன்னிட்டு பிப்ரவரி 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் சஹஸ்ர தீபாலங்கார சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல் பிப்ரவரி 28, மார்ச் 1 மற்றும் மார்ச் 2 ஆகிய தேதிகளில் ஆர்ஜித பிரம்மோத்ஸவம் மற்றும் சஹஸ்ர தீபாலங்கார சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது

Also Read
கோபத்தை விட்டு அன்பு காட்டுங்கள்!
தெப்போற்சவ சோதனை ஓட்டம்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com