என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

ஜூன் 5-ம் தேதி ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் 400-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகளில் இளநிலை என்ஜினீயரிங் படிப்புகளுக்கு சுமார் 1.7 லட்சம் இடங்கள் உள்ளன. இவை ஆண்டுதோறும் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்பட்டு வருகின்றன.

அதன்படி, 2026-27-ம் ஆண்டு என்ஜினீயரிங் கலந்தாய்வு தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் மூலம் வரும் ஜூலை மாதம் இணைய வழியில் நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு அடுத்த மாதம் (மே) 2-வது வாரத்தில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து தொழில்நுட்பக் கல்வித்துறை அதிகாரிகள் சிலர் கூறும்போது, 'என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் முடிக்கப்பட்டுவிட்டன. பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதும் கலந்தாய்வுக்கான விண்ணப்பப்பதிவு மே 2-வது வாரம் முதல் தொடங்கும். விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஜூன் மாதம் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, ஜூலை மாதம் கலந்தாய்வு நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். இதற்கான கால அட்டவணை ஜூன் மாதத்தில் வெளியாகும்' என்றனர்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் என்ஜினீயரிங் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. www.tneaonline.org என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையதள வசதி இல்லாத மாணவர்களுக்காக தமிழ்நாடு முழுவதும் 110 பொறியியல் சேர்க்கை 1800 425 0110, theacare@gmail.com மூலம் சந்தேகங்களை நிவர்த்தி செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் அனைத்து விபரங்களும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

இன்று முதல் ஜூன் 2-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பப்பதிவை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 5-ம் தேதி ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தரவரிசைப் பட்டியல் ஜூன் 29-ம் தேதி வெளியிடப்படும் எனவும் கலந்தாய்வு தேதி பின்னர் வெளியிடப்படும் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வருகிற 8-ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com