கொடிய நோயான ’எபோலா’விலிருந்து மீள 90% வாய்ப்பு : ஆராய்ச்சியாளர்கள் சாதனை

கொடிய நோயான ’எபோலா’விற்கு மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மருந்து கண்டுப்பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
Published on

காங்கோ,

ஆப்பிரிக்காவின் காங்கோ ஜனநாயக குடியரசில் எபோலா பரவியதை தொடர்ந்து 1,800 க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் 'எபோலா' நோய்க்கு எதிரான போராட்டத்தில், ஒரு வளர்ச்சியாக, இரண்டு பரிசோதனை சிகிச்சைகள் சிறப்பாக செயல்பட்டுள்ளன. அவை இப்போது காங்கோ ஜனநாயக குடியரசில் எபோலாவால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து நோயாளிகளுக்கும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

REGN-EB3 மற்றும் mAb114 என பெயரிடப்பட்ட மருந்துகள், 'எபோலா' வைரஸ் வளர்ச்சியைத் தடுத்து, மனித உயிரணுக்களில் அதன் தாக்கத்தை நடுநிலையாக்குகின்றன. இந்த இரண்டு மருந்துகளின் சோதனை முடிவுகள் கணிசமான விகிதங்களைக் காட்டிய பின்னர், 'எபோலா' விரைவில் "தடுக்கக்கூடிய மற்றும் சிகிச்சையளிக்கக்கூடிய" நோயாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சோதனைக்கு நிதியுதவி அளித்த அமெரிக்க தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் அமைப்பு , எபோலாவுவிற்கு எதிரான போராட்டத்தில் இது "மிகவும் நல்ல செய்தி" என அறிவித்துள்ளது.

ZMapp மற்றும் Remdesivir எனப்படும் மற்ற இரண்டு சிகிச்சைகள் சோதனைகளில் குறைவான செயல்திறன் கொண்டவை என்று கண்டறியப்பட்டதால் விலக்கப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com