மேலும் குறைந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன..?

தங்கம் விலை உயருவதும், குறைவதுமான நிலையிலேயே தற்போது இருந்து வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தங்கம் விலை கடந்த மார்ச் மாதத்தில் ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்தை தொட்ட நிலையில், அதன்பின்னர், மே மாதத்தில் ரூ.55 ஆயிரம் என்ற நிலையையும் கடந்தது. தொடர்ந்து விலை அதிகரித்து வந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் மத்திய அரசின் பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால் விலை மளமளவென சரிந்து, ஒரு பவுன் ரூ.51 ஆயிரத்துக்கும் கீழ் வந்தது.

மேலும் விலை குறையும் என எதிர்பார்த்தவர்களுக்கு அதன் பிறகுதான் அதிர்ச்சி காத்திருந்தது. எந்த வேகத்தில் விலை குறைந்ததோ, அதைவிட அசூர வேகத்தில் விலை அதிகரித்தது. கடந்த செப்டம்பர் மாதம் 24-ந்தேதி ஒரு பவுன் ரூ.56 ஆயிரத்தை தொட்டது. அதன் பின்னரும் விலை ஏற்ற, இறக்கத்துடன் நீடித்தது. ரூ.57 ஆயிரத்தை தொடும் நிலைக்கு வருவதும், பின்னர் குறைவதுமாக இருந்தது.

கடந்த 16-ந்தேதி ஒரு பவுன் ரூ.57 ஆயிரத்தை கடந்து இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தையும் பதிவு செய்தது. அதற்கு பிறகும் விலை குறைந்தபாடில்லை. பெரும்பாலான நாட்கள் விலை ஏற்றத்திலும், ஓரிரு நாட்கள் லேசான இறக்கத்திலும் காணப்பட்டது. இதனால் கடந்த 20-ந்தேதி ஒரு பவுன் ரூ.58 ஆயிரத்தையும் தாண்டியது. இதன் தொடர்ச்சியாகவும் தங்கம் விலை உயருவதும், குறைவதுமான நிலையிலேயே இருந்து வருகிறது.

இந்நிலையில் , தங்கம் விலை இன்றும் சற்று குறைந்துள்ளது. இதன்படி இன்று பவுனுக்கு ரூ.120 குறைந்து, ஒரு பவுன் ரூ.58,960க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து, ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 370-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி கடந்த 2 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ. 680 வரை தங்கம் விலை குறைந்துள்ளது.

வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி கிராம் ரூ. 106-க்கும், கிலோ ரூ. 1 லட்சத்து 6 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com