பாஜக, தேஜகூ கட்சிகளை கேட்காமல் தன்னிச்சையாக முடிவெடுக்கிறது - சிவ சேனா

தனது கட்சி இதழான “சாம்னா”வின் தலையங்கத்தில் பாஜக, தனது கூட்டணியான தே ஜ கூவை கேட்காமல் தன்னிச்சையாக முடிவெடுக்கிறது என்று மீண்டும் ஒருமுறை கடுமையாக குறை கூறியுள்ளது.
பாஜக, தேஜகூ கட்சிகளை கேட்காமல் தன்னிச்சையாக முடிவெடுக்கிறது - சிவ சேனா
Published on

மும்பை

மத்திய அமைச்சரவை மாற்றப்பட்டதையடுத்து சிவ சேனா பாஜகவின் அமைச்சர்கள் எவரும் எதையும் பிரமிக்கத்தக்க அளவில் சாதிக்கவில்லை என்று தெளிவாக அதிருப்தி தெரிவித்துள்ளது.

பணமதிப்பு நீக்கம் முழுமையான தோல்வி. பணவீக்கமும், வேலையின்மையும் உயர்ந்துள்ளது. இன்றும் உணவு, உறைவிடம் போன்றவை சிக்கலாகவுள்ளன. வெள்ள பாதிப்பு, குழந்தைகள் இறப்பு போன்றவற்றில் எந்த அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது? என்றார்.

பிரதமர் சீனா போகும் முன் ஏன் அமைச்சரவை மாற்றம் செய்ய வேண்டும் என்று நினைத்தார்? சென்று வந்தப்பிறகு செய்தால் என்ன? ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் கழிந்த பின்னும் மோடி அமைச்சரவையில் பரிசோதனை ஏன் செய்ய வேண்டும்? அதேசமயம் நாடு நல்ல நாள் மாயத்திற்காக காத்திருக்கிறது எனும் போது பரிசோதனை ஏன்? என்று கேட்டுள்ளது தலையங்கம்.

பாஜகவுக்கு தேவையிருந்தது என்பதாலேயே அமைச்சரவை மாற்றம். ஆனால் கூட்டணி கட்சிகள் எதற்கும் பங்களிக்கப்படவில்லை. பாஜக தன்னிச்சையாக கூட்டணி கட்சிகளுடன் ஆலோசிக்காமல் செயல்படுகிறது என்று சிவ சேனா கூறியுள்ளது. சாம்னா இதழின் தலைமை ஆசிரியரான சஞ்சய் ரௌத் தேஜகூ என்பது இல்லவேயில்லை என்றும் சாடியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com