மத்திய பட்ஜெட்: மாற்றம் இல்லாத ஏமாற்றம் - கனிமொழி எம்.பி. விமர்சனம்

பட்ஜெட்டில் தமிழ்நாட்டை மறந்தவர்களை, தேர்தலின்போது மக்களும் மறந்துவிடுவார்கள் என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்: மாற்றம் இல்லாத ஏமாற்றம் - கனிமொழி எம்.பி. விமர்சனம்
Published on

புதுடெல்லி,

2026-27 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இந்த நிலையில் மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக இருப்பதாக கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-

மத்திய பட்ஜெட்: மாற்றம் இல்லாத ஏமாற்றம் - கனிமொழி எம்.பி. விமர்சனம்
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா உடல்நலம் குறித்து நேரில் சென்று விசாரித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

மத்திய பட்ஜெட்டை பற்றி பேச வேண்டும் என்றால், ஏமாற்றம்... ஏமாற்றம்... ஏமாற்றம்; அதைத் தவிர வேறு எதுவும் இல்லை. இந்த பட்ஜெட்டில் திருக்குறளும் இல்லை; தமிழ்நாட்டுக்கான எந்த திட்டங்களும் இல்லை. விவசாயத்தை பற்றி அதிகம் பேசாத பட்ஜெட்டாக இருக்கிறது.

நிதிக்குழு அறிக்கையில் 50 சதவீத நிதியை மாநிலங்களுக்கு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதை கணக்கில் எடுக்காமல் 41 சதவீத நிதி என்று நிர்மலா சீதாராமன் அறிவித்திருப்பது மாநிலங்களுக்கு எதிரான ஒன்றாகும்.

மத்திய பட்ஜெட்: மாற்றம் இல்லாத ஏமாற்றம் - கனிமொழி எம்.பி. விமர்சனம்
திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் பெயர் சூட்டப்படும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டிற்கு எந்த நிதியையும் தராமல், நமது கனிம வளங்களை சுரண்டுவதற்கான திட்டம் தீட்டக் கூடிய பட்ஜெட்டாக உள்ளது. தேர்தலை முன்னிட்டாவது ஏதாவது செய்வார்கள் என்று நினைத்தோம். மக்களை இந்த பாஜக அரசு ஏமாற்றி இருக்கிறது. திமுகவுக்கு தமிழ்நாட்டின் வளர்ச்சிதான் எப்போதும் முக்கியம்.

என்ன செய்தாலும் தமிழ்நாட்டில் நாம் வெற்றிப் பெறப் போவதில்லை. அதனால் தமிழ்நாட்டை கண்டுகொள்ள வேண்டிய அவசியமில்லை என்று பாஜக புறக்கணித்துள்ளது. பட்ஜெட்டில் தமிழ்நாட்டை மறந்தவர்களை, தேர்தலின்போது மக்களும் மறந்துவிடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய பட்ஜெட்: மாற்றம் இல்லாத ஏமாற்றம் - கனிமொழி எம்.பி. விமர்சனம்
உருப்படியான திட்டங்களோ, நிதி ஒதுக்கீடோ இல்லாத மக்கள் விரோத பட்ஜெட் - செல்வப்பெருந்தகை

மேலும் எக்ஸ் தளத்தில் கனிமொழி வெளியிட்டுள்ள பதிவில், "மத்திய பாஜக அரசுக்கு, பட்ஜெட்டில் தமிழ்நாட்டை நினைவூட்ட தேர்தல் கூட போதவில்லை. மத்திய பட்ஜெட் மாற்றம் இல்லாத ஏமாற்றம்" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com