ஆந்திராவின் தலைநகராக அமராவதிக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து - சந்திரபாபு நாயுடு பெருமிதம்

நீண்ட நாள் கனவை நனவாக்கிய மாண்புமிகு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு அவர்களுக்கு எனது ஆந்திரப் பிரதேச மக்கள் சார்பாக எனது ஆழ்ந்த நன்றியை தெரிவித்தார்.
ஆந்திராவின் தலைநகராக அமராவதிக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து - சந்திரபாபு நாயுடு பெருமிதம்
Published on

அமராவதி,

தெலுங்கு தேசம் கட்சியின் தேசியத்தலைவர் மற்றும் ஆந்திர மாநிலத்தின் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தனது எக்ஸ் தள பக்கத்தில் ஆந்திர தலைநகர் அமராவதி என்று அதிகாரப்பூர்வமாக அரசிதழ் வெளியிட்டு அதற்காக பிரதமர் மற்றும் குடியரசுத்தலைவக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார், அதில் தெரிவித்திருப்பாதாவது:-

ஆந்திரப்பிரதேச மறுசீரமைப்பு திருத்த சட்டம் 2026-க்கு ஒப்புதல் அளித்து நமது தலைநகரின் நீண்ட நாள் கனவை நனவாக்கிய மாண்புமிகு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு அவர்களுக்கு எனது ஆந்திரப்பிரதேச மக்கள் சார்பாக எனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது மாநிலத்தின் மீது காட்டிய அர்ப்பணிப்பு மற்றும் வழிகாட்டுதலுக்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கும் இந்த மசோதாவை ஆதரித்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நமது மாநிலத் தலைவர்களுக்கும் எங்களுடன் துணை நின்ற ஒவ்வொரு குடிமகனுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இது எனது ஆந்திரப்பிரதேச மக்களுக்கும் குறிப்பாக எனது விவசாயிகளுக்கும் கிடைத்த வெற்றியாகும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com