ரூ.600 கோடி பேரம்; கர்நாடக முதல் மந்திரி மீது மத்திய அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு

தேவேகவுடா குடும்பத்தின் அரசியல் அடையாளத்தை முற்றிலுமாக அழிக்க ரூ.600 கோடி வரை பேரம் நடைபெற்று இருக்கிறது என்று தேவகவுடா கூறினார்.
 குமாரசாமி
குமாரசாமி
Published on: 

பெங்களூரு,

தேவேகவுடா குடும்பத்தின் அரசியல் அடையா ளத்தை அழிக்க ரூ.600 கோடி பேரம் பேசப்பட்டதாக முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் மீது மத்திய மந் திரி குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். மத்திய கனரக தொழில்கள் துறை மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பயப்பட தேவை இல்லை

தேவேகவுடா குடும்பத்தின் அரசியல் அடையாளத்தை முற்றிலுமாக அழிக்க ரூ.600 கோடி வரை பேரம் நடைபெற்று இருக்கிறது. இதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவர் வேறு யாருமில்லை. முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தான். தேவேகவுடா குடும்பத்தை முடிக்குமாறு அவர் கூறியுள்ளார். அவரின் பாவங்கள் நிரம்பியுள்ளன. உண்மை வெளியே வந்தே தீர வேண்டும். கடவுளே எல்லாவற்றையும் வெளியே கொண்டு வருவார். போலீஸ் அதிகாரிகள் மூலம் இதை மூடிமறைக்க முயற்சி நடக்கிறது. இதுகுறித்து உயர்மட்ட விசாரணை நடைபெற வேண்டும். ரகசிய வீடியோ விவகாரத்தில் தேவையின்றி எங்கள் கட்சி நிர்வாகிகளை இலக்காக கொண்டு செயல்படுகிறார்கள். இதை கண்டு யாரும் பயப்பட தேவை இல்லை.

வேறு மாதிரியான விளைவுகள்

இந்த விசாரணை எப்படி நடக்கிறது என்பதை பார்க்க 5 நாட்கள் காலஅவகாசம் வழங்குகிறேன். இல்லாவிட்டால் நிலைமை சரியாக இருக்காது. இந்த ரகசிய வீடியோ குறித்த விசாரணையை முடிக்க சதி நடக்கிறது. இந்த விசாரணை குறித்து சித்தராமையா, யதீந்திரா சித்தராமையாவுக்கும் சந்தேகம் உள்ளது.

சித்தராமையா எதற்காக மிரட்டப்பட்டார். இதன் உண்மை தன்மை வெளியே வர வேண்டும்.கோலார் அருகே ஒரு டிரைவர் கொலை நடந்துள்ளது. இத்தகைய சந்தேகத்துக்கு இடமளிக்கும் கொலைகளில் உண்மை வெளியே வரவேண்டும். ரகசிய வீடியோ விவகாரத்தில் நியாயமான முறையில் விசாரணை நடைபெற வேண்டும். இல்லாவிட்டால் வேறு மாதிரியான விளைவுகள் ஏற்படும்.

எங்கள் கட்சி நிர்வாகிகள் யாரும் தலைமறைவாகவில்லை. அவர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள் கேட்க வேண்டிய அவசியம் என்ன. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும்படி எங்கள் கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com