டெல்லி: மழை, புழுதி புயலால் மின் இணைப்பு துண்டிப்பு; மக்கள் அவதி

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு பகுதிகளிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
டெல்லி: மழை, புழுதி புயலால் மின் இணைப்பு துண்டிப்பு; மக்கள் அவதி
Published on

புதுடெல்லி,

டெல்லியின் பல பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்துள்ளது. இதனால் புழுதி புயலும் நேற்று ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, பொது மக்களின் பாதுகாப்பை முன்னிட்டு பல்வேறு இடங்களில் தற்காலிக அடிப்படையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இதன்படி, பவானா, நரேலா, ஜகாங்கீர்புரி, சிவில் லைன்ஸ், சக்தி நகர், மாடல் டவுன், வசீராபாத், திர்பூர் மற்றும் புராரி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இன்றி மக்கள் பாதிப்படைந்தனர்.

புழுதி புயலை தொடர்ந்து, பலத்த காற்றும் வீசியது. அதனுடன் மழையும் சேர்ந்து கொண்டது. இதனால், மரங்கள், மரக்கிளைகள் பல்வேறு இடங்களில் முறிந்து விழுந்தன. மின் இணைப்பு வயர்கள் அவற்றின் மீது விழுந்ததிலும் மரங்கள் சாய்ந்தன.

அவை சாலையிலும், வாகனங்கள் மீதும் விழுந்து பாதிப்பு ஏற்படுத்தின. இதனால் வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதனை முன்னிட்டே பல்வேறு பகுதிகளிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது என அதுபற்றிய அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்தது. அதனுடன், புழுதி புயல் மற்றும் பலத்த காற்று வீசியதன் தொடர்ச்சியாக உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக, சில விமானங்கள் வேறு பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டன.

எனினும், பல நாட்களாக 40 டிகிரி செல்சியசுக்கு கூடுதலாக வெப்பநிலை அதிகரித்து இருந்த சூழலில், மழையால் நேற்று மாலை வெப்பம் தணிந்து பல்வேறு பகுதிகளிலும் குளிர்ச்சி ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com