தேர்தல் வெற்றி, கொள்ளையடிப்பதற்கு கிடைத்த லைசென்ஸ்; இதுவே மோடி அரசின் தாரக மந்திரம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

பெட்ரொல், டீசல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
தேர்தல் வெற்றி, கொள்ளையடிப்பதற்கு கிடைத்த லைசென்ஸ்; இதுவே மோடி அரசின் தாரக மந்திரம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு
Published on

புதுடெல்லி,

பெட்ரொல், டீசல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசை சாடி அறிக்கை வெளியிடப்படுள்ளது.

கர்நாடக மாநில காங்கிரஸ் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தேர்தலில் பெறும் வெற்றி என்பது கொள்ளையடிப்பதற்கு கிடைத்த லைசென்ஸ் போன்றது என்பதை மோடி அரசு தாரக மந்திரமாக கொண்டு செயல்பட்டு வருகின்றது.

கொடூரமான மூர்க்கத்தனமான மற்றும் கண்மூடித்தனமான பொருட்களின் விலையேற்றம் காரணமாக இந்தியாவின் ஒவ்வொரு குடும்பத்தின் பட்ஜெட்டும் நிலைகுலைந்துள்ளது.

இந்த விலையேற்றம் என்பது ஒவ்வொரு நாளும் காலையில் தெரிவிக்கும் குட் மார்னிங் பரிசு என்று அறிக்கையில் இருப்பதை காங்கிரஸ் தலைவர் ஆர் எஸ் சுர்ஜிவாலா சுட்டிக்காட்டினார்.

மோடி அரசாங்கம் நாட்டின் அன்னதத்தாக்கள்(உணவு அளிப்பவர்கள்) மீது பழிவாங்கும் முயற்சியில் உள்ளது. 50 கிலோ அரிசி பைகளின் விலை ரூ.1200லிருந்து 1350ஆக அதிகரித்துள்ளது.

இத்தகைய விலை உயர்வே ஒவ்வொரு தனிநபரின் வாழ்க்கையை நடத்துவதற்கு பெரும் சவாலாக உள்ளது. ஏனெனில் பொருட்களின் விலையேற்றம் ஒவ்வொரு குடும்பத்தின் வாழ்வாதாரத்தையும் கடுமையாக பாதிக்கிறது.

2020-21 ஆண்டு காலகட்டதில் பெட்ரோல் பயன்பாடு 279.69 லட்சம் மெட்ரிக் டன் ஆகும். லிட்டருக்கு ரூ.7.20 உயர்ந்துள்ளதால், மக்கள் மீது ரூ.20,138 கோடி நிதிச்சுமை ஏற்படும்.

கடந்த 8 அண்டுகளில் வணிக பயன்பாட்டுக்கான சமையல் கியாஸ் சிலிண்டர் விலை, பெருமளவில் ரூ.845 கூடுதலாக உயர்த்தப்பட்டுள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com