ஐதராபாத்தில் நட்சத்திர ஓட்டல்களில் ‘கள்’ விற்க திட்டம் - தெலுங்கானா அமைச்சர் தகவல்

தோட்டக்கலை பண்ணைகளில் கூட ஈச்சம், பனை கன்றுகள் இலவசமாக வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும்.
ஐதராபாத்தில் நட்சத்திர ஓட்டல்களில் ‘கள்’ விற்க திட்டம் - தெலுங்கானா அமைச்சர் தகவல்
Published on

ஐதராபாத்,

தெலுங்கானா மாநில போக்குவரத்து மற்றும் பி.சி.நலச்சங்க துறை மந்திரி பொன்னம் பிரபாகர் ஐதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தெலுங்கானா கலாசாரத்தை வெளி உலகிற்கு தெரியப்படுத்தும் வகையில் இனி ‘கள்’, நீரா(பதநீர்) போன்றவற்றின் விற்பனை ஊக்குவிக்கப்படும்.

இதற்கான தீவிர முயற்சியில் அரசு உள்ளது. தோட்டக்கலை பண்ணைகளில் கூட ஈச்சம், பனை கன்றுகள் இலவசமாக வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும். ஐதராபாத்தில் உள்ள 5 நட்சத்திர ஓட்டல்களில் கூட கள், நீரா போன்றவை விற்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கள் இறக்கும் கூலி தொழிலாளிகளின் நலனுக்காக இந்த அரசு பல திட்டங்களை செயல்படுத்தும். எக்ஸ்பீரியம் பார்க்கில் ‘பனைமேளா’ நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அங்கு 250 வகையிலான பனை மரங்கள் நடப்பட்டுள்ளன. அவைகளை மக்கள் கண்டு ரசிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com