ஆன்லைன் ஏல மோசடி வழக்கில் நடிகர் ஜெயசூர்யாவிடம் அமலாக்கத்துறை விசாரணை


ஆன்லைன் ஏல மோசடி வழக்கில் நடிகர் ஜெயசூர்யாவிடம் அமலாக்கத்துறை விசாரணை
x

விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகர் ஜெயசூர்யாவுக்கு அமலாக்கத்துறையினர் அழைப்பு விடுத்தனர்.

திருச்சூர்,

கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்தவர் சாதிக் ரஹீம். இவர் சேவ் பாக்ஸ் ஆன்ைலன் ஏல நிறுவனம் நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தின் செயலி மூலம் முதலீடு செய்தால் மின்னணு பொருட்களை குறைந்த விலையில் ஆன்லைன் மூலம் வாங்கலாம் என்றும், பங்கு தருவதாகவும் ஆசைவார்த்தை கூறப்பட்டது.

இதன் மூலம் பல லட்சம் ரூபாய் மோசடி நடந்ததாக திருவனந்தபுரத்தை சேர்ந்த ஒருவர் கடந்த 2023-ம் ஆண்டு திருச்சூர் கிழக்கு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சாதிக் ரஹீமை கைது செய்தனர். அந்த நிறுவனத்தின் விளம்பர தூதராக மலையாள பிரபல நடிகர் ஜெயசூர்யா ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகருக்கு அமலாக்கத்துறையினர் அழைப்பு விடுத்தனர். அதன்படி, நடிகர் ஜெயசூர்யா தனது மனைவி உடன் கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

1 More update

Next Story