மேகதாது திட்ட விவகாரம் சட்ட போராட்டத்தில் கர்நாடகத்துக்கு வெற்றி- டி.கே.சிவக்குமார் பேட்டி

மேகதாது திட்ட விவகாரத்தில் நடைபெற்ற சட்ட போராட்டத்தில் கர்நாடகத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது என்று முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.
மேகதாது திட்ட விவகாரம் சட்ட போராட்டத்தில் கர்நாடகத்துக்கு வெற்றி- டி.கே.சிவக்குமார் பேட்டி
Published on: 

மேகதாது திட்டத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கிவிட்டதாக கர்நாடக முதல் மந்திரி டிகே சிவக்குமார் தொடர்ந்து கூறி வருகிறார். இதை தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மறுப்பு தெரிவித்து வருகிறார்கள். இப்படி இரு மாநிலங்களுக்கு இடையே இந்த விவகாரத்தில் பனிப்போர் நீடித்து வருகிறது. இந்த நிலையில் முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நாங்கள் மேகதாது திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளோம். இந்த விவகாரத்தில் நடைபெற்ற சட்ட போராட்டத்தில் கர்நாடகம் வெற்றி பெற்றுள்ளது. இதில் கர்நாடகம், தமிழகம் ஆகிய இரு மாநிலங்களுக்கும் நீதி கிடைத்துள்ளது. அதனால் இந்த திட்டத்தை தற்போது அமல்படுத்த வேண்டும். அது ஒன்றுதான் பாக்கியாக உள்ளது.

ஒரே குரலில் பேசுகிறது

இந்த விவகாரம் தற்போது யாருடைய கையிலும் இல்லை. இந்த பூமியின் சட்டத்தையும், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். தமிழகத்துக்கு உரிய நீரை வழங்கும்படி சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. நாங்கள் நிச்சயம் இதை பின்பற்றி அவர்களுக்கான நீரை வழங்குவோம்.

கர்நாடகமும் ஒரே குரலில் பேசுகிறது

அதனால் நாங்கள் சண்டை போட விரும்பவில்லை. அதற்கான அவசியமும் எங்களுக்கு இல்லை. தமிழகத்தில் காவிரி ஆற்றில் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. மேகதாது திட்டத்தால் பெங்களூரு, மண்டியா, ஹாசன், துமகூரு, மைசூரு ஆகிய மாவட்டங்கள் நேரடியாக பயன் பெறும். பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு தீர்க்கப்படும். இந்த விஷயத்தில் ஒட்டுமொத்த கர்நாடகமும் ஒரே குரலில் பேசுகிறது" இவ்வாறு கூறினார்.

X