புதுச்சேரி,
பிரதமர் மோடியின் மனதில் உதித்த திட்டங்களில் முக்கியத்துவம் பெற்ற திட்டம், தூய்மை இந்தியா திட்டம்.
புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியில் இந்த திட்டத்தை முதல்-மந்திரி நாராயணசாமி நேற்று முன்தினம் தொடங்கிவைத்தார். அப்போது அவர் வேட்டியை மடித்துக்கொண்டு கொஞ்சமும் தயக்கமின்றி, கழிவுநீர் கால்வாயில் இறங்கி மண்வெட்டியால் வெட்டி சுத்தம் செய்தது ஊடகங்களில் படத்துடன் வெளியானது. பல தரப்பினரின் பாராட்டையும் பெற்றது.
இதைப் பிரதமர் நரேந்திர மோடியும் பாராட்ட தவறவில்லை.
இது தொடர்பான படத்தொகுப்பை அவர் டுவிட்டரில் வெளியிட்டு அதில், நாராயணசாமி அவர்களே, நீங்கள் முன்னணியில் நின்று வழிநடத்தி மற்றவர்களுக்கு உத்வேகம் தந்து, இந்தியாவை தூய்மைப்படுத்தும் இயக்கத்திற்கு வலிமை சேர்த்திருக்கிறீர்கள், பாராட்டுக்கள் என கூறி உள்ளார்.