சாதி கலவரத்தை தூண்ட முயற்சித்த வழக்கில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

பாளையங்கோட்டை தாலூகா பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் 3 பேர் நெல்லை மாநகர பகுதியில் சாதி கலவரத்தை தூண்ட முயற்சித்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் ஆவர்.
சாதி கலவரத்தை தூண்ட முயற்சித்த வழக்கில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
Published on

திருநெல்வேலி, பாளையங்கோட்டை தாலூகா, கக்கன்நகரைச் சேர்ந்த ஆஞ்சநேயர் மகன் முருகன் (வயது 26), பெரியதுரை மகன் மந்திரமூர்த்தி(20) மற்றும் பேசில் பாண்டியன் மகன் ராஜா(26) ஆகிய 3 பேர், திருநெல்வேலி மாநகர பகுதியில் சாதி கலவரத்தை தூண்ட முயற்சித்த வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டு வந்தனர்.

இதனையடுத்து திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனரின் உத்தரவுப்படி நேற்று மேற்சொன்ன 3 பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com