தமிழகத்தில் மேலும் 4 புதிய அரசு கலை கல்லூரிகள் தொடங்கப்படும்: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

2025-26ம் கல்வியாண்டில் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் உயர்கல்வி பெறும் வகையில் 2025-26ம் கல்வியாண்டில் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம், திருச்சி மாவட்டம் துறையூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஆகிய இடங்களில் புதிய கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். புதிதாக தொடங்கப்படும கல்லூரிகள் மூலம் 1,120 மாணவர்கள் உயர்கல்வி பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com