மேட்டுப்பாளையம் அருகே பூட்டிய காருக்குள் மூச்சுத்திணறி 9 வயது சிறுவன் பலி

வீட்டுக்கு முன்பு ஆசிரியர் ஒருவரின் கார் நிறுத்தப்பட்டு இருந்த காருக்குள் ஏறி முகுந்த் விளையாடிக் கொண்டு இருந்தான்.
மேட்டுப்பாளையம் அருகே பூட்டிய காருக்குள் மூச்சுத்திணறி 9 வயது சிறுவன் பலி
Published on

மேட்டுப்பாளையம்,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பெத்திக்குட்டை கருப்பராயன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் வேலுமணி (வயது 39). குடிநீர் வடிகால் வாரியத்தில் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சுமதி(31). இவர்களது மகன் முகுந்த்(9). அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தான்.

கார்

இந்த நிலையில் நேற்று மதியம் வேலுமணியின் வீட்டுக்கு முன்பு ஆசிரியர் ஒருவரின் கார் நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த காருக்குள் ஏறி முகுந்த் விளையாடிக் கொண்டு இருந்தான்.

அப்போது காரின் கதவுகள் திடீரென மூடிக்கொண்டன. முகுந்த், எவ்வளவோ முயற்சித்தும் காரின் கதவுகளை திறக்க முடியவில்லை. இதனால் சிறிது நேரத்தில் காரிலேயே அவன் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தான்.

X

Daily Thanthi
www.dailythanthi.com