தக்கலை: திருமண நிச்சயமான நிலையில் வாலிபர் கிணற்றில் சடலமா மீட்பு

தக்கலை: திருமண நிச்சயமான நிலையில் வாலிபர் கிணற்றில் சடலமா மீட்பு

தக்கலை அருகே திருமணம் நிச்சயமான வாலிபர் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published on

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே புங்கரை பகுதியை சேர்ந்தவர் புவனேஸ்வரி. இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவர்களது மகன் பிரதீப் (வயது 30), நாகர்கோவில் பகுதியில் உள்ள பிரபல துணிக்கடையில் பணிபுரிந்து வந்தார். பிரதீபுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் திருமணம் நிச்சியக்கப்பட்டது.

இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன் பிரதீப் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து ஸ்கூட்டரில் சென்றுள்ளார். ஆனால், வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவரது தாயார் உறவினர்களிடம் கூறியுள்ளார்.

உறவினர்கள் பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனையடுத்து புவனேஸ்வரி தக்கலை போலீசில் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர்.

இந்தநிலையில், பூக்கடை அருகே புதிதாக வேலை நடந்துவரும் நான்குவழி சாலை அருகே பிரதீபின் ஸ்கூட்டர் நிற்பதை கண்ட அவரது உறவினர்கள் அப்பகுதியில் தேடிவந்தனர். அப்போது அங்குள்ள கிணற்றில் பிரதீப் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் இது குறித்து தகவல் அறிந்த தக்கலை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்டனர். உடலை கைப்பற்றிய போலீசார் பிரேதபரிசோதனைக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரதீப் கொலை செய்யப்பட்டார? அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் நிச்சயமாண நிலையில் பிரதீப் சடலமாக கிணற்றில் மீட்கப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com