குறுகிய கால அரசியலுக்காக மத்திய அரசு புலனாய்வு அமைப்புகளின் நேர்மையை அடகு வைக்கக் கூடாது - மு.க.ஸ்டாலின்

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் முன்னாள் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐயால் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா உள்பட 23 பேரையும் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக அரசுத் தரப்பில் எந்த ஆதாரமும் இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Also Read
கச்சத்தீவு ஆலய திருவிழா இன்று தொடக்கம்: தமிழகத்தில் இருந்து 4 ஆயிரம் பேர் பயணம்
கோப்புப்படம்

இந்த நிலையில், சிபிஐ வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

Also Read
கொழுமம் ஆரம்ப துணை சுகாதார நிலையத்தில் மீண்டும் தொடங்கிய மருத்துவ சேவை
கோப்புப்படம்

குறுகிய கால அரசியலுக்காக மத்திய பாஜக அரசு புலனாய்வு அமைப்புகளின் நேர்மையை அடகு வைக்கக் கூடாது. கொஞ்சமாவது வெட்கப்பட வேண்டும். எனது மதிப்பிற்குரிய நண்பர் அரவிந்த் கெஜ்ரிவால், சிசோடியா, இவை அனைத்தையும் கடந்து உறுதியாக நின்று உண்மையைத் தானே பேச அனுமதித்ததற்கு வாழ்த்துகள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Also Read
தாய்க் கழகத்துக்கு ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்கிறேன் - மு.க.ஸ்டாலின் பதிவு
கோப்புப்படம்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com