தமிழ்நாட்டில் கவுரவக் கொலைகளை தடுக்க ஒரு வலுவான சட்டம் கொண்டு வர வேண்டும் - மாணிக்கம் தாகூர் எம்.பி.

கவுரவக் கொலைகளை தடுக்க கர்நாடக அரசு “இவா நம்மவா” மசோதாவை நிறைவேற்றியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

விருதுநகர்,

தமிழ்நாட்டில் கவுரவக் கொலைகளை தடுக்க ஒரு வலுவான சட்டம் கொண்டு வர வேண்டும் என்று விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாட்டில் கவுரவக் கொலைகளை தடுக்க ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும் என்று நாம் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறோம். அதே கோரிக்கையை கர்நாடக அரசு “இவா நம்மவா” மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது.

Also Read
போட்டித்தேர்வில் வெற்றி பெற்ற 751 மருத்துவர்களுக்கு நியமன ஆணை எங்கே? - அன்புமணி கேள்வி
கோப்புப்படம்

இது ஒருவர் தன் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை பாதுகாக்கும் முக்கியமான முன்னேற்றமான நடவடிக்கை. கவுரவக் கொலை போன்ற மனிதாபிமானமற்ற குற்றங்களுக்கு எதிராக இது ஒரு வலுவான பதிலாகும். இதுவே உண்மையான சமூக நீதி. குறைவான பேச்சு, அதிகமான செயல்.

Also Read
சிலிண்டர் தட்டுப்பாடு: விறகு அடுப்புக்கு மாறிய அம்மா உணவகங்கள்
கோப்புப்படம்

இந்த முன்னேற்றமான முயற்சிக்காக சமூகநீதி காவலன் ராகுல் காந்தியில் தலைமைக்கும், கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவின் முயற்சிக்கும் பாராட்டுகள். தமிழ்நாட்டிலும் இதுபோன்ற ஒரு வலுவான சட்டம் கொண்டு வந்து மனித உரிமைகள், சமத்துவம் மற்றும் தனிநபர் சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம். எப்போது நடக்கும்!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தேர்தல் அறிக்கையில் கார்த்தி சிதம்பரம் இதை இணைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Also Read
ஒடிசா மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து - 10 பேர் உயிரிழப்பு
கோப்புப்படம்
X

Daily Thanthi
www.dailythanthi.com