சூளகிரி அருகேமின்சாரம் தாக்கி சிறுவன் பலி

சூளகிரி அருகேமின்சாரம் தாக்கி சிறுவன் பலி
Published on

சூளகிரி:

சூளகிரி அருகே மின்கம்பியில் சிக்கிய பட்டத்தை எடுக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

மின்சாரம் தாக்கியது

சென்னை நங்கநல்லூர் கே.கே.நகரை சேர்ந்தவர் அசோக்குமார். இவருடைய மகன் குல்தீப் (வயது 12). இவன் கோடை விடுமுறைக்காக கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே காமன்தொட்டியில் உள்ள தனது மாமா வீட்டுக்கு வந்தார். கடந்த 5-ந் தேதி மாலை சிறுவன் வீட்டு மொட்டை மாடியில் பட்டம் விட்டு விளையாடி கொண்டிருந்தான்.

அப்போது எதிர்பாராதவிதமாக மின்கம்பியில பட்டம் சிக்கி கொண்டது. அதை எடுக்க குல்தீப் முயன்றபோது மின்கம்பியை தொட்டதாக கூறப்படுகிறது. இதில் மின்சாரம் தாக்கி குல்தீப் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டான்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com