கவர்னர் அர்லேகர் இன்று ஊட்டி செல்கிறார்

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் கவர்னர் அர்லேகர் தங்கி ஓய்வு எடுக்கிறார்.
கவர்னர் அர்லேகர் இன்று ஊட்டி செல்கிறார்
Published on

சென்னை,

தமிழ்நாடு பொறுப்பு கவர்னர் அர்லேகர் 2 நாள் சுற்றுப் பயணமாக இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு ஊட்டி செல்கிறார். இதற்காக அவர் சென்னை மக்கள் மாளிகையில் இருந்து காலை 11.55 மணிக்கு புறப்பட்டு விமான நிலையம் சென்று, அங்கிருந்து விமானம் மூலம் கோவை செல்கிறார். இதைத்தொடர்ந்து கோவையில் இருந்து சாலை மார்க்கமாக கார் மூலம் ஊட்டி மக்கள் மாளிகைக்கு செல்கிறார்.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா அருகே உள்ள மக்கள் மாளி கையில் கவர்னர் அர்லேகர் ஓய்வெடுக்கிறார். பின்னர் நாளை (சனிக்கிழமை) ஊட்டியில் இருந்து சாலை மார்க்கமாக கார் மூலம் கோவை செல்கிறார். அங்கு கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் தங்கி ஓய்வு எடுக்கிறார்.

இதையடுத்து நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் உலக யோகா தின நிகழ்ச்சியில் கவர்னர் அர்லேகர் பங்கேற்கிறார். அதன் பின்னர் அங்கிருந்து சென்னை புறப்பட்டு செல்கிறார். கவர்னர் வருகையையொட்டி ஊட்டி, கோவையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com