முதல்-அமைச்சர் விஜய்க்கு கவர்னர் அர்லேகர் பிறந்தநாள் வாழ்த்து

முதல்-அமைச்சர் விஜய் நல்ல உடல் ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் நீண்ட நிறைவான வாழ்விற்காக கவர்னர் அர்லேகர் பிரார்த்திப்பதாக தெரிவித்தார்.
முதல்-அமைச்சர் விஜய்க்கு கவர்னர் அர்லேகர் பிறந்தநாள் வாழ்த்து
Published on

சென்னை,

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மற்றும் நடிகரான விஜய் இன்று தனது 52-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் உள்ள ரசிகர்கள் சிறப்பு கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

சமூக நல பணி

கோவில்களில் சிறப்பு வழிபாடு, அன்னதானம், நலத்திட்ட உதவிகள், ரத்ததான முகாம்கள் உள்ளிட்ட பல்வேறு சமூக நலப் பணிகளை விஜயின் ரசிகர்கள் மேற்கொண்டு வருகின்றனர். விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் என பலரும் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

கவர்னர் அர்லேகர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழ்நாடு கவர்னர், ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தமிழ்நாடு முதல்-அமைச்சர், ச.ஜோசப் விஜய், பிறந்தநாளையொட்டி தனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவரது நல்ல உடல் ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் நீண்ட நிறைவான வாழ்விற்காக அவர் பிரார்த்திப்பதாகவும்.

இதயம் கனிந்த நல்வாழ்த்து

மேலும்,தமிழ்நாட்டு மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்யவும், மாநிலத்தை முன்னேற்றம், வளர்ச்சி மற்றும் வளமையை நோக்கி வழிநடத்தவும் தேவையான வலிமை, ஞானம் மற்றும் ஆற்றல் அவருக்கு என்றும் கிடைக்க வேண்டும் என்று தனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com