

சென்னை,
நீட் தேர்வில் மட்டுமல்ல, நீட் தேர்வே மோசடிதான் என்பதை படம்பிடித்துக் காட்டுகிறது இன்றைய தி இந்து நாளிதழில் வெளியாகியுள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் கட்டுரை என்று உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:
நீட் தேர்வில் மட்டுமல்ல, நீட் தேர்வே மோசடிதான் என்பதை படம்பிடித்துக் காட்டுகிறது இன்றைய தி இந்து நாளிதழில் வெளியாகியுள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் கட்டுரை.
ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, கிராமப்புற, அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விக் கனவைச் சிதைப்பதே நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளின் உண்மையான நோக்கம்!
அந்தத் தடையை உடைப்பதற்கான படையாக தி.முக. என்றைக்கும் முன் வரிசையில் வாள் தூக்கி நிற்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.