கவர்னர் அர்லேகருடன் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி கவர்னரிடம் உதயநிதி ஸ்டாலின் மனு அளித்துள்ளார்.
கவர்னர் அர்லேகருடன் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு
Published on: 

சென்னை,

பெண் கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

உதயநிதி ஸ்டாலின் புகார்

இதனிடையே, கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய வழக்கில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டி.ஜி.பி.யிடம் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேற்று புகார் மனு அளித்திருந்தார்.

கவர்னருடன் சந்திப்பு

இந்த நிலையில், தமிழக கவர்னர் அர்லேகரை சந்திப்பதற்காக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு வருகை தந்தார். இந்த சந்திப்பின்போது, ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய வழக்கில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி கவர்னரிடம் உதயநிதி ஸ்டாலின் மனு அளித்துள்ளார்.

X