இயக்குனர் பாரதிராஜா மறைவு: கவர்னர் ஆர்.வி. அர்லேகர் இரங்கல்

புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவால் மிகுந்த துயரமடைந்தேன் என ஆர்.வி. அர்லேகர் தெரிவித்தார்.
தமிழக கவர்னர் ஆர்.வி. அர்லேகர், பாரதிராஜா
Published on

சென்னை,

இயக்குநர் பாரதிராஜா (84 வயது) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் அவரது மகன் மனோஜ் மறைந்த நிலையில், அத்துயரிலிருந்து மீளாத பாரதிராஜா, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

காலமானார்

வீட்டில் இருந்தபடியே மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் இயக்குநர் பாரதிராஜா இன்று அதிகாலையில் காலமானார்.

தமிழக கவர்னர் மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

மறைவால் மிகுந்த துயரமடைந்தேன்

புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவால் மிகுந்த துயரமடைந்தேன். கிராமிய வாழ்வையும் மனித உணர்வுகளையும் உண்மை தன்மையுடன் வெளிப்படுத்திய அவரது படைப்புகள் தமிழ் திரைப்பட உலகில் அழியாத தடம் பதித்துள்ளன.

ஆழ்ந்த இரங்கல்கள்

அவரின் குடும்பத்தினருக்கும் திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com