சேலத்தில் பயங்கர விபத்து... அரசுப் பேருந்து மோதி 7 பேர் உயிரிழப்பு

அரியானூர் பகுதி அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பைக் மற்றும் டெம்போ மீது மோதியது.
சேலத்தில் பயங்கர விபத்து... அரசுப் பேருந்து மோதி 7 பேர் உயிரிழப்பு
Published on

சேலம்,

சேலம் மாவட்டம் அரியானூர் பகுதியில் நிகழ்ந்த பயங்கர விபத்தில் அரசுப் பேருந்து மோதி 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read
இறைவன் அனைத்து நலன்களையும் வழங்கிட பிரார்த்திக்கிறேன் - எடப்பாடி பழனிசாமி ரம்ஜான் வாழ்த்து
சேலத்தில் பயங்கர விபத்து... அரசுப் பேருந்து மோதி 7 பேர் உயிரிழப்பு

முன்னதாக கோவையில் இருந்து சேலம் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் அரியானூர் பகுதி அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரம் சென்று கொண்டிருந்த பைக் மற்றும் டெம்போ மீது மோதி சாலையின் மறுபக்கம் சென்றது.

Also Read
தி.மு.க. வேட்பாளர்கள் நேர்காணல் தேதி மாற்றம்
சேலத்தில் பயங்கர விபத்து... அரசுப் பேருந்து மோதி 7 பேர் உயிரிழப்பு

இந்த கோர விபத்தில் பைக்கில் சென்ற தாய், மகன் மற்றும் டெம்போவில் பயணித்த 11 மாதக் குழந்தை, 5 வயது சிறுமி உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் என 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து அறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read
தொடரும் சர்வர் பிரச்சினை: எப்போதும் மன்னிப்பு கேட்கும் பதிவுத்துறை இணையதளம்..!
சேலத்தில் பயங்கர விபத்து... அரசுப் பேருந்து மோதி 7 பேர் உயிரிழப்பு
X

logo
Daily Thanthi
www.dailythanthi.com