முன்னாள் அமைச்சர் வீட்டில் 8 மணி நேரத்தை தாண்டி அமலாக்கத் துறை சோதனை

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் வீட்டில் 8 மணி நேரத்தை தாண்டி அமலாக்கத் துறை சோதனை
Published on

புதுக்கோட்டை,

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடந்து வருகிறது. 4 கார்களில் வந்த 8-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். 8 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறையினரின் சோதனை நீடித்து வருகிறது. சோதனையில் ஆவணங்கள் சில சிக்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே வருமான வரித்துறை சோதனை நடத்திய நிலையில், அவர்கள் அளித்த தகவலின்படி அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவதாகவும், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாகவும் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சட்ட விரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஏற்கனவே 2021-ல் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com