

சென்னை,
தமிழக கவர்னர் ஆர்.வி.அர்லேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
இந்த நாள், தற்போதைய மற்றும் எதிர்கால தலைமுறைகளுக்காக நமது சுற்றுச்சூழலை பாதுகாத்து பேண வேண்டியுள்ள கூட்டுப்பொறுப்பை நினைவூட்டுகிறது. இயற்கை அனைத்து உயிர்களையும் தாங்கி நிற்கிறது; அதன் நுண்ணிய சமநிலையை பாதுகாப்பது நமது கடமையாகும். தமிழ்நாடு, இயற்கையுடன் ஒத்துழைந்து வாழும் சிறப்பான பாரம்பரியத்தை கொண்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளை ஏற்படுத்துதல், இயற்கை வளங்களை பாதுகாத்தல், கழிவுகளை குறைத்தல் மற்றும் உயிரியல் பல்வகைமையை காத்தல் ஆகியவற்றின் மூலம் நிலைத்த வளர்ச்சிக்கான நமது உறுதிப்பாட்டை நாம் மீண்டும் வலியுறுத்துவோம்.
ஒவ்வொரு குடிமகனும், குறிப்பாக இளைஞர்களும், பசுமையான, சுத்தமான மற்றும் ஆரோக்கியமான சூழலை உருவாக்க முனைப்புடன் செயல்பட வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன். தனிநபர் மட்டத்தில் செய்யப்படும் சிறிய முயற்சிகள் கூட, சமூகமெங்கும் இணைந்தால் பெரிய மாற்றத்தை உருவாக்கும். நமது பூமியை பாதுகாத்து, வருங்கால தலைமுறைகளுக்கான நிலையான எதிர்காலத்தை உருவாக்க நாம் அனைவரும் இணைந்து செயல்படுவோம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.