பஞ்சு விலை அதிகரிப்பால் நூல் கிலோவுக்கு ரூ.5 உயர்வு: நூற்பாலைகள் அறிவிப்பு

பஞ்சு விலை தினமும் மாறுபடுவதால் நஷ்டத்தை தவிர்க்கும் வகையில், வாரம் தோறும் நூல் விலை நிர்ணயம் செய்ய முடிவு செய்துள்ளோம் என திருப்பூரில் நூற்பாலைகள் அறிவித்துள்ளன.
நூல் விலை உயர்வு
Published on

திருப்பூர்,

சர்வதேச சந்தையில் பஞ்சு விலை உயர்வால் ஒசைரி நூல் விலை கிலோவுக்கு ரூ.5 உயர்ந்துள்ளது என்று நூற்பாலை உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

பஞ்சு விலை உயர்வு:

சர்வதேச சந்தையில் பஞ்சு விலை உயர்ந்தது. இதனால் இந்தியாவிலும் பஞ்சுக்கு கிராக்கி அதிகரித்து, விலையும் உயர்ந்தது. அதிகபட்சமாக ஒரு கேண்டி (356 கிலோ) பஞ்சு விலை, ரூ.71 ஆயிரம் வரை உயர்ந்தது. பின்னலாடை துணி உற்பத்திக்கு பயன்படுத்தும் ஒசைரி நூல் விலை கிலோவுக்கு ரூ.50 வரை உயர்த்தப்பட்டது.

நூல் விலை கிலோவுக்கு ரூ.5 உயர்வு:

பஞ்சு இறக்குமதி வரிக்கு விலக்கு அளிக்கப்பட்டதால், விலை குறைந்தது. நூல் விலையும் கடந்த 1 மற்றும் 15ம் தேதிகளில் கிலோவுக்கு தலா ரூ.10 குறைந்தது. நூல் விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று ரூ.5 உயர்ந்துள்ளது.

வாரம் தோறும் நூல் விலை நிர்ணயம்:

இதுதொடர்பாக திருப்பூரைச் சேரந்த நூற்பாலை உரிமையாளர்கள் கூறுகையில், “இந்திய பருத்தி கழகம் மீண்டும் பஞ்சு விலையை உயர்த்தியுள்ளது. கடந்த சில நாட்களில் கேண்டிக்கு ரூ.1,000 அதிகரித்துள்ளது. ஒரு கேண்டி பஞ்சு விலை மீண்டும் ரூ.68 ஆயிரம் உயர்ந்துள்ளது. இதனால் பஞ்சு விலையில் கிலோவுக்கு ரூ.5 விலை உயர்த்தியுள்ளோம். பஞ்சு விலை தினமும் மாறுபடுவதால், நஷ்டத்தை தவிர்க்கும் வகையில் மாதம் இருமுறை என்பதற்கு பதிலாக, வாரம் தோறும் திங்கட்கிழமை நூல் விலை நிர்ணயம் செய்ய முடிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com